Monday 6th of May 2024 05:27:59 AM GMT

LANGUAGE - TAMIL
-
அனுராதபுர சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் தர்மலிங்கம் சித்தார்த்தன் எம்பி கண்டனம்!

அனுராதபுர சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் தர்மலிங்கம் சித்தார்த்தன் எம்பி கண்டனம்!


அனுராதபுர சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவமானது கண்டிக்கப் படவேண்டிய விடயம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அனுராதபுரத்தில் நடந்த சம்பவமானது ஒரு ராஜாங்க அமைச்சர்.சிறைச்சாலைகளுக்கு பொறுப்பான அமைச்சர் சிறைச்சாலைக்கு பொறுப்பான அமைச்சரே ஒரு துப்பாக்கியை சிறைச்சாலைக்குள் எடுத்துச் சென்று அங்கு இருக்கக்கூடிய தமிழ் கைதிகளை மிரட்டுவது என்பது ஒரு மிகப் பாரதூரமான சம்பவமாகும்.

நான் நம்புகின்றேன் இலங்கையினுடைய சரித்திரத்திலே மிக பாரதூரமான சம்பவங்கள் நடந்தேறி இருக்கின்றன. ஏற்கனவே சிறைச்சாலையில் பலர் கொல்லப்பட்டிருக்கின்றார்கள்.

இப்படியாக ஒரு அமைச்சர் நேரடியாகச் சென்று இப்படியான வன்முறைகளில் ஈடுபடுவது என்பது இதுவே முதல் தடவையாகும். மிக கண்டிக்கப் படவேண்டிய விஷயம். நான் மிக வன்மையாக கண்டிப்பது மாத்திரமல்ல இது சம்பந்தமாக அரசாங்கம் உடனடியாக சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்கத் தவறினால் இது போன்ற நிகழ்வுகள் வருங்காலத்தில் பயங்கரமான செயற்பாடுகளை ஏற்படுத்தி விடும் என்பதை அரசாங்கம் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றார்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE